குடிபோதையில் விபத்து – ஆறு பேர் காயம்

குடிபோதையில் விபத்து – ஆறு பேர் காயம்
X

விபத்து

திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர் இட்லி கடை மீது மோதியதில் 6 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகே நேற்று இரவு ஓருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால் சாலையோரம் உள்ள இட்லி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பேர் மீது மோதியது. இதில் அங்கு இருந்தவர்கள் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story