பெண்ணை கடத்த முயன்ற கூலிப்படையினர் 6 பேர் கைது  !

பெண்ணை கடத்த முயன்ற கூலிப்படையினர் 6 பேர் கைது  !

பெண் கடத்தல்

கன்னியாகுமரியில் பெண்ணை கடத்த முயன்ற கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கன்னியாகுமரி அருகே உள்ள ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் மெட்டில்டா (50). இவர் அந்த பகுதியில் பல சரக்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மருமகன் சுபாஷ். இவர் தனது மாமியார் பெயரில் உள்ள சொத்தை மிரட்டி எழுதி வாங்குவதற்காக ஆறு பேர் கொண்ட கூலிப்படையை ஏவினார்.

இதைத்தொடர்ந்து அந்த கூலிப்படை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சிரோ பாய்ண்ட் பகுதியில் வைத்து மெட்டில்டாவை மிரட்டி காரில் கடத்த முயன்றனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற கன்னியாகுமரி போலீசார் கூலிப்படையை சேர்ந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து மெட்டில் டாவை மீட்டு, கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசார் 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story