குன்னம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6பேர் கைது

குன்னம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டமான கேம்லிங் விளையாடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கேம்லிங் ஆடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனிப்படையினர் குன்னம் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்டனர்

அப்போது ஜெமீன்ஆத்தூர் பகுதியல் உள்ள செல்லியம்மன் கோவில் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக டோக்கன் சிஸ்டம் மூலம் சீட்டாட்டமான கேம்லிங் விலையாடிக்கொண்டிருந்த, அரியலூர் தாண்டவராயன்புரம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிமாறன் 28 அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் ராஜா 38, அரியலூர் மார்க்கெட் தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ரஞ்சித் 32, அரியலூர் தோல் கிடங்கு தெருவை சேர்ந்த ஞானசம்பந்தம் மகன் அசோக்ராஜ் 40, அரியலூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் தமிழரசன் -22, மயிலாடுதுறை குத்தாலம் ரயிலடி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜாராம் மகன் வேல்முருகன்- 23 ஆகியோர்களை கைது செய்த தனிப்படையினர் குற்றவாளிகளை குன்னம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து மூன்று கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 28,470 ரூபாய் பணம் 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் வழிகாட்டுதலின்படி குன்னம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் குற்றவாளிகள் 6 பேரையும் அரியலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைக்க உதவியாக இருந்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story