கதண்டு கடித்து 6 பேர் காயம்

கதண்டு கடித்து 6 பேர் காயம்
X

காயமடைந்த பெண்கள்

அரியலூர் அருகில் கதண்டு கடித்து 6 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் சீனிவாசபுரம் கிராமத்தில் மாமரத்தில் இருந்த கதண்டு கூட்டினை பருந்து கலைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேரை கதண்டு கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி ஊராட்சிமன்ற தலைவர் கலைசெல்வி நெடுஞ்செழியன் மற்றும் சின்னப்பா, விஜயா, புகழேந்தி உள்ளிட்ட 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது மாமரத்தில் உள்ள கதண்டு கூட்டினை பருந்து கலைத்ததாகவும், இதனையடுத்து அங்கிருந்தவர்களை கதண்டு கடித்ததாக கூறினர்.

Tags

Next Story