செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிறை
X

செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், 2020ல், மாகரல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். அடுத்த மாதமே, காவாம்பயிர் கிராமத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற பெண்ணிடம், மூன்று சவரன் தங்கச் சங்கிலியை, மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இந்த இரு வழக்குகளில், மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இரு செயின்பறிப்பு சம்பவங்களிலும், உத்திரமேரூர் அருகேயுள்ள குறுமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வினோத்குமார், 27, என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் - -2ல், வழக்கை நடத்தினர். அரசு தரப்பு வழக்கறிஞராக முருகன் வாதாடி வந்தார். விசாரணை முடிந்து, இவ்வழக்கில் வினோத்குமார் குற்றவாளி என, நீதிபதி வாசுதேவன் நேற்று உத்தரவிட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story