மொபைல்போன் கொள்ளை நால்வருக்கு 6 ஆண்டு சிறை
மொபைல்போன் கொள்ளை நால்வருக்கு 6 ஆண்டு சிறை
10000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மொளச்சூர், காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 32. இவர், அண்ணன் அப்துல் ரஹீம், 34, என்பவருடன், சுங்குவார்சத்திரம் பஜாரில், மொபைல் போன் விற்பனை கடையை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 16 இரவு, கடையில் இருந்த, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான போன்கள் திருடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூலை 21ல், இந்த வழக்கில் ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹமீத் ஹூசைன், 35, இர்பான், 28, ஜாபித், 25 மற்றும் அலிஜான், 50 ஆகிய நான்கு பேரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார், நான்கு பேருக்கும் ஆறு ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story