நகை கடை கொள்ளையர்களுக்கு 6 ஆண்டு சிறை
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.பி.என்.காலனி, மூன்றாவது வீதியில் நாச்சிமுத்து என்பவரின் மகன் ஜெயகுமார் (51) என்பவர் JK ஜீவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 03.03.2022ம் தேதி இரவு 22.00மணிக்கு வழக்கம்போல ஜெயகுமார் கடையை அடைத்துவிட்டு பின்னர் அடுத்த நாள் காலை 08.00மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின் கதவு பூட்டு மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வடக்கு குற்ற காவல் நிலையத்தில் ஜெயபால் என்பவர் அளித்த புகாரின்பேரில் கொள்ளை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டு விசாரணை செய்து எதிரிகளான அயூப் என்பவரின் மகன் மக்தாப் ஆலம் (37), அப்துல் வாகித் என்பவரின் மகன் முகமது சுப்வான் (40), மிட் ஆரிப் என்பவரின் மகன் தில்காஷ் (29), ஜகாங்கீர் என்பவரின் மகன் முகமது பத்ருல் (25) மற்றும் குட்டுஸ் என்பவரின் மகன் முர்தஜா (37)ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு சாட்சிகளையும் ஆஜர்படுத்தி நீதிமன்ற விசாரணை முடித்த நிலையில், திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம்-1ல் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற பாரதிபிரபா எதிரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.200/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை கையாண்ட புலன்விசாரணை அதிகாரிகளான அப்போதிருந்த காவல் ஆய்வாளர் தெய்வமணி, தற்போதைய காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த காவல் ஆளினர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, வெகுவாக பாராட்டினார்.