60 வயது மதிக்கத்தக்க முதியோர் மர்மச்சாவு
Dindigul King 24x7 |27 Dec 2024 2:34 PM GMT
திண்டுக்கல் மா.மு கோவிலூர் பிரிவு அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மர்மச்சாவு கொலையா இயற்கை மரணமா என போலீசார் விசாரணை
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ளது மா.மு கோவிலூர் பிரிவு. இந்த பிரிவின் அருகே குருவி குளம் உள்ளது குளத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் 2 வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபரின் அருகே இரண்டு மது பாட்டில்கள் உள்ளது. இறந்த நபர் யார் எந்த ஊர் போன்ற விபரங்கள் தெரியவில்லை. தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தனரா அல்லது இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அடித்தனரா அல்லது மது போதையில் தரையில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அந்தப் பகுதியை சுற்றி சுற்றி வந்து நின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story