60 ரப்பர் சீட்டுகள் திருட்டு -போலீஸ் விசாரணை

X
குமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (40) தூய்மை பணியாளர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பிள்ளையுடன் வசித்து வருகிறார். மேலும் அவர் தனக்கு கிடைக்கும் ரப்பர் சீட்டுகளை சிறிது சிறிதாக சேர்த்து தனது வீட்டு அருகே உள்ள இடத்தில் வைத்திருந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு அனிதா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த சுமார் 60 ரப்பர் சீட்டுகளை திருடி சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரப்பர் சீட்டுகள் திருட்டு போனது அறிந்த அனிதா இது குறித்து ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரப்பர் சீட்டுகளை திருடி சென்ற மரம் நபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன ரப்பர் ஷீட்டுகள்
Next Story

