60 வயது மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து 3 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்ட காவல்துறையினர்.*

60 வயது மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து 3 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்ட காவல்துறையினர்.*
X
60 வயது மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து 3 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்ட காவல்துறையினர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரேஷன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 60 வயது மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து 3 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்ட காவல்துறையினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கம்மாபட்டி அருகே வேட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் பெருமாள் (65) சுந்தரம்மாள் ( 60) சம்பவ தினமான நேற்று சுந்தரம்மாள் வேட்டை பெருமாள் கோவில் நகரில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று விட்டு கம்மாபட்டி சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அது சமயம் பின்னால் இருசக்கர வாகனத்தில் அவரை தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென சுந்தரம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பிடுங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளார். நகை திருடப்பட்டதை அறிந்த சுந்தரம்மாள் சத்தமிட்டு கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயர் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஹெல்மெட் அணிந்தவாறு செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது மேலும் அவன் அணிந்திருந்த சட்டை மற்றும் வாகனம் ஆகியவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில். நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் வளையல் கார தெருவில் வசிக்கும் சங்கர் என்பவரது மகன் வெள்ளத்துரை வயது 27 என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் வெள்ளத்துரை மற்றும் சுந்தரம்மாளிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட எட்டு பவுன் தங்க நகை ஆகியவற்றை மீட்டு வெள்ளத்துரை மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story