விழுப்புரம் தொகுதியில் 60 லட்சத்தில் புதிய கட்டடங்கள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான கட்டங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப் பட்ட ரேஷன் கடை, கோலியனூரில் ரூ.8½ லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, நன்னாட்டாம்பாளையத்தில் ரூ.2 லட்சத்தில் கட்டப் பட்ட குடிநீர் தொட்டி, கண்டமானடி கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம், சத்திப்பட் டில் ரூ.8½ லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, நன்னாட்டில் ரூ.7% லட்சத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் நெற்களம் என மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் டாக்டர் இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மேற்கண்ட கட்டிடங்களை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.விழாவில் கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருக வேல், வளவனூர் பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய பொருளா ளர் காசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கண்டமானடி கிளை நிர்வாகிகள் பிரபு, ரவிச்சந்திரன், சிட்டிபாபு, கிருஷ்ண மூர்த்தி, ராஜா, வேலுசாமி, குமரவேல், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
