600 ஆண்டுகள் பழமையான கோவில் திருக்குடமுழுக்கு விழா

X
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெங்கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீகதிர் நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்ப்ரோசண விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றது. 21ஆண்டுகளுக்கு பின்னர் கோவில் மற்றும் கோபுரங்கள் புரானமைப்பு திருப்பணிகள் நிறைவு பெற்று,இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் கால பூஜையாக மங்கள வாத்தியம், அனுக்சை, புண்யாக வாஜனம், விஸ்வ சேனா பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் பட்டாச்சாரியார்களால் நடைபெற்றது. இன்று காலை வேத பாராயணம், திவ்ய பிரபந்த பாராயணம், பூர்ணகுதியட ன் ஆறாம் கால பூஜை நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கருவறை, தாயார், பரிவார மூர்த்திகளான கணபதி, ஹயக்ரீவர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை மேளதாள முழங்க கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள், ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் கன்னிவாடி ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட மாவட்டம் மற்றும் மதுரை திருப்பூர் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கோபிநாத், கிரி, கோபாலகிருஷ்ணன் மற்றும் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் எப்ப ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தேசிய மாணவர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story

