கரூரில்,ரூ.6,000-மதிப்புள்ள குடிநீர் குழாயை களவாடிய வாலிபர் கைது.

கரூரில்,ரூ.6,000-மதிப்புள்ள குடிநீர் குழாயை களவாடிய வாலிபர் கைது.
கரூரில்,ரூ.6,000-மதிப்புள்ள குடிநீர் குழாயை களவாடிய வாலிபர் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர் ஏபிடி கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 34. இவரது வணிக நிறுவனத்தில் விற்பனைக்காக ரூபாய் 6 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் குழாய்களை வைத்து இருந்தார், இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி கரூர் சர்ச் கார்னர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 36 என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த குழாய்களை களவாடியுள்ளார். சம்பவம் குறித்து தினேஷ் குமார் கொடுத்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் , குடிநீர் குழாய்களை களவாடிய விஜயகுமாரை கைது செய்தனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story