சொர்ணவாரி பருவத்திற்கு 6,000 ஏக்கர் நெல் சாகுபடி

சொர்ணவாரி பருவத்திற்கு 6,000 ஏக்கர் நெல் சாகுபடி

சொர்ணவாரி பட்டத்திற்கு இதுவரை உத்திரமேரூர் வட்டாரத்தில் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்


சொர்ணவாரி பட்டத்திற்கு இதுவரை உத்திரமேரூர் வட்டாரத்தில் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், ஏரி பாசனம், கிணற்று பாசனம் மற்றும் ஆற்று பாசனம் மூலம் சம்பா, நவரை. சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், பெரும்பாலும் நெல் பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த பருவமழையை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நவரைப்பட்ட நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். உத்திரமேரூர் ஒன்றியம் முழுக்க நவரை பருவத்திற்கு 27,000 ஏக்கர்நிலப்பரப்பில் நெல் பயிரிட்டனர். நவரை பருவத்திற்கான நெல் அறுவடை பணிகளை தொடர்ந்து சொர்ணவாரி பட்ட சாகுபடி பணிகளில் இப்பகுதி விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிணற்று பாசனம் மற்றும்ஏரிகளில் நீர் இருப்பை கொண்டு அதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர். இவ்வாறு நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கு இதுவரை உத்திரமேரூர் வட்டாரத்தில் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஜூலை மாதத்திற்குள் கூடுதலாக 2,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி ஆகும் என எதிர்பார்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் சாகுபடிசெய்துள்ள நெல் பயிர்கள்பூச்சி தாக்குதல் இல்லாமல் செழிமையாக உள்ளதாக, உத்திரமேரூர் வட்டார வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்து உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story