மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆம் ஆண்டு துவக்க விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  60 ஆம் ஆண்டு துவக்க விழா

மாநில கருத்தரங்கம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி பெரம்பலூரில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆம் ஆண்டு துவக்க விழா, மார்க்சிஸ்ட் தத்துவார்த்த இதழ் சந்தா வழங்கும் விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான சாதனைகளை விளக்கும் மாநில கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவரும் சண்முகம், கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் சிந்தன், எம்.எல்.ஏ நாகை மாலி, எம்.எல்.ஏ சின்னதுரை, ஸ்ரீதர், நாகராஜன், சாமி.நடராஜன், வாலண்டினா, மாவட்ட செயலாளர்கள் நாகை. மாரிமுத்து திருவாரூர் சுந்தரமூர்த்தி, தஞ்சாவூர் சின்னை பாண்டியன், திருச்சி புறநகர் ஜெயசீலன், திருச்சி மாநகர் ராஜா, புதுக்கோட்டை கவிவர்மன், கரூர் ஜோதிபாசு, அரியலூர் இளங்கோவன், உள்ளிட்ட நாகை, திருவாரூர், திருச்சி புறநகர், திருச்சி மாநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,கரூர், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் வளர்ச்சி மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்தும் தற்போது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அதன் திட்டங்கள் குறித்தும் மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் குறித்தும் அதில் கம்யூனிஸ்ட் பங்கு என்ன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்லதுரை கொடியேற்றி வைத்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி வரவேற்புரையாற்றினார், இந்த 60 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story