குமரியில் நகை பறித்த இருவருக்கு 61 மாதம் சிறை

குமரியில்  நகை பறித்த இருவருக்கு 61 மாதம் சிறை

குமரியில் நகை பறித்த இருவருக்கு 61 மாதம் சிறை

குமரியில் கத்தியை காட்டி நகை பறித்த இருவருக்கு 61 மாதம் சிறை தண்டனை வழங்கிய இரணியல் நீதிமன்றம்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பூட்டேற்றி தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் அருள் பாலன் டீனா சிங், மனைவி சேவியர் கிராஸ் . கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி குளச்சல் அருகே இரும்பிலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தந்தை மற்றும் குழந்தையுடன் சென்றார். உறவினரை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் போது, அங்கு வந்த குருந்தன்கோடு இந்திரா நகர் காலனி சேர்ந்த மூக்கையா மற்றும் தோவாளை புதூர் காலனி சேர்ந்த முருகன் ஆகியோர் அருள் பாலன் டீனா சிங்கின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க நகை பறித்து விட்டு கத்தியை காட்டி தப்பி சென்றனர். இது குறித்த அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் மூக்கையா, முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் மாஜிஸ்திரேட் அமீருதீன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் மூக்கையா, முருகன் ஆகிய இருவருக்கும் தலா 61 மாதங்கள் சிறை தண்டனையும், தல 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதை அடுத்து குளச்சல் போலீசார் இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story