அதிக பாரம் ஏற்றிய லாரிக்குரூ.61 ஆயிரம் அபராதம்

அதிக பாரம் ஏற்றிய லாரிக்குரூ.61 ஆயிரம் அபராதம்
அபராதம் விதிக்கப்பட்ட டாரஸ் லாரி
வலியாற்று முகத்தில் போலீசாரின் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு கனக வாகனங்களில் கல், எம் சாண்ட் ஆகியவை சுமார் 700க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. வலியாற்றுமுகம் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் குறிப்பிட்ட எடை விட அதிக எடையுடன் லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தினமும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் குமரி மாவட்ட காவல் துறை உத்தரவுபடி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் செக் போஸ்ட் அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று நேற்று குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வலியாற்று முகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அதிவேகமாக கனிம வள ஏற்றி வந்த கனரக டாரஸ் லாரியில் மடக்கி பிடித்து சோதனை போட்டனர். லாரியில் குறிப்பிட்ட அளவை விட 20 டன் அதிக எடை கொண்ட எம் சாண்ட் கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கு வந்த கனரகவாகனத்துக்கு ரூபாய் 61 ஆயிரம் அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்ட லாரியின் உரிமையாளர் தொகை செலுத்திய பிறகு போலீசார் வாகனத்தை விடுவித்தனர்.

Tags

Next Story