திருச்சிற்றம்பலத்தில் ரூ.61.22 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, செருவாவிடுதி வடக்கு ஊராட்சி, நாகன் தெருவில், அயோத்தி தாஸ் பண்டிதர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தற்போது உள்ள சாலையை வலுப்படுத்தி, தார்ச்சாலையாக அமைக்கும் பணி ரூ.29.22 லட்சத்தில் நடைபெறுகிறது.
அதேபோல், செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் புதிய பொதுவிநியோக மைய சொசைட்டி கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்படுகிறது. மேலும், செட்டியார் தெரு சாலையை, தார்ச்சாலையாக்கும் பணி, ஒன்றியக் குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன் பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் ஊராட்சி பொக்கன் விடுதி வடக்கு வடிவழகி அம்மன் சாலை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி புதன்கிழமையன்று துவக்கி வைத்தார். இதில், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் த.பன்னீர் செல்வம், மாவட்ட மகளிர் அணி தலைவர் தீபலட்சுமி, பேராவூரணி வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.கே.பி.குமார்,ன செருவாவிடுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயராமன் (வடக்கு), தங்க.ராமஜெயம் (தெற்கு), மோகன் (திருச்சிற்றம்பலம்), விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பா.பாலசுந்தரம் , முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.