62 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி மாணவர்கள் சந்திப்பு – 80 வயதிலும் ஒற்றுமையின் அதிசயம்!

X
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், 1961 ஆம் ஆண்டு படித்த 15 முன்னாள் மாணவர்கள், 62 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 80 வயதை கடந்தும், குச்சி பிடிக்காமல் நடந்தே வந்தவர்களாக அனைவரும் பெருமை அடைந்தனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவி ஷெராய், அன்று இருந்த ஒற்றுமை இன்று இல்லை. பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். இன்று அந்த ஒற்றுமை இல்லை. அதுபோன்றது இனி வரவே கூடாது, என வருத்தம் தெரிவித்தார். 62 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் சந்திப்பது ஒரு சாதனை. இதை கின்னஸ் சாதனையாக பார்க்கலாம் என்றும், இது வாழ்க்கையின் கடைசி கட்டம், ஆனாலும் மகிழ்ச்சியுடன் கடைசி வரை இருக்க வேண்டும், என்றும் கூறினார்.
Next Story

