அரசுப் பள்ளிகளில் ரூ.62 லட்சத்தில் வகுப்பறை கட்ட அடிக்கல்

அரசுப் பள்ளிகளில்  ரூ.62 லட்சத்தில் வகுப்பறை கட்ட அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளிக்கு, இரு வகுப்பறை கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31 லட்சத்தில் கட்டப்படுகிறது. அதேபோல், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரு வகுப்பறை கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இரு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கு.திராவிட செல்வம், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீத், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் வை. ரவிச்சந்திரன், மணக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம் மண் கொண்டார், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என். எஸ்.சேகர், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, சடையப்பன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, கலாராணி, பள்ளி தலைமையாசிரியர்கள் ராஜ்குமார் (மணக்காடு), விஜயலெட்சுமி (பேராவூரணி), மணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் மீனா தங்கப்பன், பேராவூரணி பேரூராட்சி உறுப்பினர்கள் முகிலன், ஆனந்தன், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story