கும்பகோணம் அருகே ரூ.62 ஆயிரம் பறிமுதல்
கும்பகோணம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் சுவாமிமலை மெயின் ரோடு திம்மகுடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு 2 ஆய்வு மேற்கொண்டிருந்த போது தாராசுரம், வளையப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திலிருந்து ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய். 62,310 கைப்பற்றபட்டது. பின்னர் இந்த தொகையை சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.
Next Story