நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவாலாக்குடி யில் வயலில் பதுக்கி வைத்திருந்த 620 லிட்டர் சாராயம் பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவாலாக்குடி யில் வயலில் பதுக்கி வைத்திருந்த 620 லிட்டர் சாராயம் பறிமுதல்

சாராயம் பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவாலாக்குடி காலனி தெரு பகுதியை சேர்ந்த தவமணி தனக்கு சொந்தமான வயலில் 620 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது தனிப்படை போலீசார் சாராய மூட்டைகளை பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில், கள்ள சாராய விற்பனை மற்றும் சாராய கடத்தலை தடுக்கும் வகையில்பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வந்த ரகசிய தகவலின்படி தனிப்படை உதவி ஆய்வாளர் அக்பர் அலி தலைமையில் காவல்துறையினர் குற்ற சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கீழ்வேளூர் அடுத்த கீழக்காவாலாக்குடி காலனி தெரு பகுதியை சேர்ந்த தவமணி தனக்கு சொந்தமான வயலில் 620 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது தனிப்படை போலீசார் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து தலைமறைவான தவமணியை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story