தடுப்பணையில் மூழ்கி முதியவர் பலி
கோப்பு படம்
தூத்துக்குடி அருகே தனது நண்பருடன் தடுப்பணையில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் கனகராஜ்(62). இவரும், இவரது உறவினா் ஆறுமுகம் என்பவரும் ஏரல் அருகேயுள்ள மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று மாலை சென்றனர். அப்போது கனகராஜ் எதிா்பாராமல் நீரில் மூழ்கினார். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Next Story