64 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
Virudhunagar King 24x7 |22 Dec 2024 1:10 PM GMT
64 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
விருதுநகரில் பழைய கடந்த 64 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.... விருதுநகரில் உள்ள அரச உதவி பெறும் கே.வி.எஸ். உயர் நிலைப்பள்ளியில் கடந்த 1956 முதல் 1959 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 64 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட இந்த நிகழ்வு கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது எனவும், இதில் கலந்து கொண்டவர்கள் பழைய நினைவுகளை சந்தோசமாகப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சி தலைவர் பிருந்தாவன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சந்தோஷ்குமார், பொருளாளர் ராஜமாணிக்கம் உட்பட பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து கலந்து கொண்டு பழைய நினைவுகளை பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.டி. கணேசன் செய்திருந்தார்.
Next Story