பட்டமரத்தான் கோயிலில் 64- ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64- ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64- ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக காலை 7 மணியளவில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு தொடங்கிய பூச்சொரிதல் விழாவில் பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து 4 நகரின் பல்வேறு வீதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானபொதுமக்கள் மஞ்சள் பூத்தட்டு மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனர். விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒருவார காலம் இந்த விழா நடைபெறவுள்ளது.
Next Story