65 ஆவது குடியரசு தின விழா என்.ஏஸ்.கே. பள்ளி மாணவன் சாதனை மாணவர்கள் தினத்தில் பாராட்டு கல்வித்துறை சார்பில் மாநில அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது

65 ஆவது குடியரசு தின விழா என்.ஏஸ்.கே. பள்ளி மாணவன் சாதனை மாணவர்கள் தினத்தில் பாராட்டு கல்வித்துறை சார்பில் மாநில அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது
சாதனை படைத்த மாணவனுக்கு மாணவர்கள் தினத்தில் பாராட்டு
தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான 65 வது குடியரசு தினவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டியில் தேனி மாவட்டம் என்.எஸ்.கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் கு.இன்பத்தமிழன் அவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 200 மீ,400மீ,600மீ என மூன்று போட்டிகளில் முதலிடம் பிடித்து, அதனுடன் குறைந்த வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தமைக்கு சர்வதேச மாணவர்கள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் அவர்கள் தலைமையில் தேனி மாவட்டத்தில் முதல் மாணவராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்களை சந்தித்து பரிசு பெற்ற V.பழனிராஜா Enviro Trend Setter (Total water & Waste Water Solution ) அவர்கள் இன்பத்தமிழன் அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவம் செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹீரோ ஸ்டார் ராஜதுரை மற்றும் ஹீரோ ஸ்டார் ஜெயப்பிரகாஷ் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
Next Story