6.5 கோடி திட்டப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதால் கடும் அதிருப்தி

X
மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் 6.5 கோடி திட்டப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதால் கடும் அதிருப்தி. எஞ்சியுள்ள திமுக அதிமுக விசிக கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி டென்டரை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டுக்கு ரூபாய் 6.5 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் டெண்டர் விடுவதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்துள்ளனர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பதினைந்தாவது வார்டு சுயேச்சை வேட்பாளராக திமுக கவுன்சிலரை எதிர்த்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனைவி கவுன்சிலராக உள்ள நிலையில் அந்த வார்டுக்கு மட்டும் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப் பெருந்தகை மற்றும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரைப்படி ஒதுக்கப்பட்டுள்ளது அறிவுசார் பூங்கா பேவர் பிளாக் சாலை என ஒரு வார்டுக்கு மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கூட நிதி ஒதுக்கி பணிகள் அமைக்க டெண்டர் கோரப்படவில்லை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற கவுன்சிலர்கள் தற்பொழுது போர்க்கொடி தூக்கி உள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலராக உள்ள அபுபக்கர் இன்று திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிறந்துட்ட வளாகத்தில் அமைந்த கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் டெண்டர் கோரப்படுவதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததுடன் பேரூராட்சிகளின் இணைய இயக்குனர் ஜெயக்குமாரிடமும் இது குறித்து முறையிட்டுள்ளார் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள திமுக அதிமுக விசிக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி இயக்குனர் குறாலா ஐஏஎஸ் அவர்களிடமும் புகார் அளித்து டென்டரை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதுடன் தவறும் பட்சத்தில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர் பேட்டி திரு அபூபக்கர் மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு விசிக கவுன்சிலர்
Next Story

