6.5 டன் குட்கா பொருட்கள் மற்றும் 21 கிலோ கஞ்சா பறிமுதல் கைது

6.5 டன் குட்கா பொருட்கள் மற்றும் 21 கிலோ கஞ்சா பறிமுதல் கைது
ஆவடி காவல் ஆணையாளர் சங்கர். உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணைரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நேற்று இன்று E5 சோழவரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார். 400 அடி சாலை. அம்பேத்கர் நகர் பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னை நோக்கி வந்த TN 29 BR 2970 பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் 21 கிலோ கஞ்சா மற்றும் Hans 2445 kg. Vimal 648 Kg 3093 பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தி வந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (வ/27) த/பெ. Bபெருமாள், பாண்டாரவிளை, லட்சுமிபுரம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கிளீனரான கோயில் ராஜ் (வ/62) த/பெ. திருசெல்வம். குறும்பூர், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இரண்டு பேரை கைது செய்து, கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அடிப்படையில் சோழவரம், சிவந்தி ஆதித்தனார் நகரில் உள்ள தனியார் குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது குடோனில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 3.5 LOT எடையுள்ள குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து 1) ராமச்சந்திரன் (வ/25) த/பெ பொன்னுத்துரை. கீழப்பாவூர், தென்காசி மாவட்டம் 2) பொன்னுசாமி. (வ/42) த/பெ மாரியப்பன், விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குட்கா பொருட்களை ஆந்திரா மாநிலத்தில் இருந்து டன் கணக்கில் வாங்கி வந்து மேற்கண்ட குடோனில் பதுக்கி வைத்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சப்ளை செய்து வந்தது தெரியவத்தது. இதனையடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளனர் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்பட்டு குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை காவல் ஆணையாளர் சங்கர் பாராட்டியுள்ளார்.
Next Story