சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேர் கைது
காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும், அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில், கோரிக்கை விளக்க உரை ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51பெண்கள் உள்பட 65 பேரை செய்து அழைத்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சித்ரா, ஒன்றிய தலைவர் தேன்மொழி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்யா, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தில் மாவட்ட செயலாளர் பால்சாமி, மாவட்ட பொருளாளர் முத்துசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர்கள் சின்னத்துரை மனோகரன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரோஜா ராதா ருக்மணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.