அரூர் பகுதியில் விதிமீறிய வாகனங்களுக்கு 6.53 லட்சம் அபராதம்
வாகன ஆய்வாளர் அலுவலகம்
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பைபாஸ் சாலை, கோபி நாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட் ரோடு,மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். கடந்த மாதம் ஏப்ரல் 1 முதல் 30ம்தேதி வரை, 308 வாகனங் கள் தணிக்கை செய்யப்பட்டது.
அப்போது ஆம்னிபஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிகபாரம் ஏற்றிய வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் கள் பொருத்திய வாகனங்கள் உள்ளிட்ட 125 வாகனங்களுக்கு 72,500 வீதம் ,அபராதம் 5,80,500 என மொத்தம் 6,53,000 விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
முறையான ஆவணம் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில்,வாகனம் ஓட்டும் போது, செல்போன் பயன்படுத்த கூடாது.கட்டாயம் ஹெல்மெட் அணிந்து டுவீலர் ஓட்ட வேண்டும். வாகனம் முன், பின்புறத்தில் பம்பர் இருந்தால் அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும்' என்றனர்.