66 ஆண்டுகளாக கோடையில் நிரம்பாத கரைவெட்டி ஏரி நிரம்பியது

X
அரியலூர், மே.29- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் 1958 ல் காமராசர் முதல்வராக இருந்த போது1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஏரி கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி. இந்த ஏரி 1958 ல் அமைக்கப்பட்ட பிறகு கோடை காலத்தில் ஏரி வறண்டு காணப்படும் இதுவே நடைமுறை. 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழையில் ஒரே இரவில் கரைவெட்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் இதுவே முதன்முறை என 70 வயது முதிர்ந்த பலரும் கரைவெட்டி ஏரி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் கரைவெட்டி ஏரியிலிருந்து தண்ணீரானது ஏலாக்குறிச்சி அருகே உள்ள காமரசவல்லி சுக்கிரன் ஏரிக்கு உபரி நீரானது திறக்கப்பட்டு வெளியேறி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கரைவெட்டி ஏரி மூலம் 50 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும் மறைமுகமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலமும் கரும்பு,நெல், வாழை, எள் பயறு, கடலை, மிளகாய்,மொச்சை பூசணி, பரங்கி, தக்காளி ,கத்தரி , அவரை, உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் காய்கறிகள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று படகு சவாரி விடுவதற்காக தயார் நிலையில் படகு கரைவெட்டி ஏரியில் நிறுத்தப்பட்டுள்ளதனை . இது விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

