கொளத்தூர் வாலிபரிடம் 6.71 லட்ச ரூபாய் மோசடி
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் வாலிபரிடம் 6.71 லட்ச ரூபாய் மோசடி
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவருக்கு, பகுதி நேர வேலை தொடர்பாக வாட்ஸப் செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நம்பிய அவர் ஏழு தவணைகளாக ரூ. 6 லட்சத்து 71 ஆயிரத்து 641யை அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறியபடி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story