தேர்தல் பறக்கும் படையினரால் 68 ஆயிரம் பறிமுதல்
சங்ககிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்ககிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு ரூ.68, 850ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். துணை வணிக வரி அலுவலர் மனோஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எடப்பாடி வட்டம், கச்சுப்பள்ளி கிராமம், மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த குப்பண்ணகவுண்டர் மகன் நடேசன் என்பவர் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.68,850ஐ பறிமுதல் செய்து நாமக்கல் உதவி தேர்தல் அலுவலர் லோகநாயகியிடம் ஒப்படைத்தனர்.
Next Story