கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.68.94 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.68.94 லட்சத்திற்கு வர்த்தகம்
விற்பனைக்கு வந்த தானியங்கள்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 68.94 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, எள் 650 மூட்டை, மக்காச்சோளம் 90, நாட்டு கம்பு 30, சிவப்பு சோளம் 8, ராகி 4, உளுந்து 3, தலா ஒரு மூட்டை வேர்க்கடலை, ஆமணக்கு, தேங்காய் உட்பட 788 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை எள் 11,124, மக்காச்சோளம் 2,247, நாட்டு கம்பு 4,806, சிவப்பு சோளம் 5,279, ராகி 2,919, உளுந்து 8,809, வேர்க்கடலை 7,209, ஆமணக்கு 4,829, தேங்காய் 5,139 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 68 லட்சத்து 94 ஆயிரத்து 791க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 19, எள் 6, வரகு 5 என மொத்தம் 30 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,323, எள் 10,100, வரகு 2,859 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 94, நெல் 26, கம்பு 5, தலா ஒரு மூட்டை உளுந்து, ராகி என மொத்தம் 127 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 13,724, நெல் 2,692, கம்பு 4,659, உளுந்து 8,189, ராகி 3,009 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 446 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags

Next Story