திருப்போரூர் அருகே 7 மாடுகள் பலி: ஒருவர் கைது

திருப்போரூர் அருகே 7 மாடுகள் பலி: ஒருவர் கைது
திருப்போரூர் அருகே 7 மாடுகள் பலி ஒருவர் கைது
திருப்போரூர் அருகே 7 மாடுகள் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்போரூர் அருகே காலவாக்கம் ஆறுவழிச்சாலையின் இருபுறமும், கடந்த 11ம் தேதி ஏழு கறவை மாடுகள் இறந்து கிடந்தன. சாலையில் சென்றவர்கள் திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் திருப்போரூர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

மாடுகள் நெம்மேலி ஊராட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான மாடுகள் என தெரிந்தது. அதன்பின், அனைத்து மாடுகளையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி பகிங்ஹாம் கால்வாய் அருகே காலியிடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கான பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர். விசாணையில், கண்ணகப்பட்டைச் சேர்ந்த வடிவேலு, 63, விவசாய நிலத்தில்,

வேர்க்கடலை சாகுபடியை பன்றிகள் சேதப்படுத்துவதால் மின்வேலி அமைத்துள்ளார்.இந்த மின்வேலியில் சிக்கி ஏழு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இதை அறிந்த வடிவேலு, அதே பகுதியை சேர்ந்த சீதாபதி, 30, ஜீவா, 27, விஜயன், 40, ஆகியோர் உதவியுடன், டிராக்டர் மூலம் எருமை மாடுகளை சாலையில் வீசியது தெரியவந்தது.

நான்கு பேரையும் கைது செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story