தா.பேட்டை அருகே நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் பலி

பலியான ஆடுகள்
தா.பேட்டை அருகே ஜெயங்கொண்டான் ஊராட்சி ராசிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராசு விவசாயி. இவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு பிறகு பட்டியில் அடைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அதிகாலை அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்த நிலையிலும், மூன்று ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையிலும் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி கனகராசு இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர்கள் அங்கு சென்று ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்துபோன ஆடுகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
