நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 7பேர் வேட்புமனு தாக்கல்

நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 7பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் செய்த நாகக வேட்பாளர்

நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 7பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி யின் சார்பில் வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் விக்கிரவாண்டி கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

அதன் பிறகு தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சென்ற வேட்பாளர் டாக்டர் அபிநயா, அங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரத்தை டெபாசிட்டாக செலுத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய் தார். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புதென்னரசு, களஞ்சியம், ஜெகதீஷ்பாண்டி யன், பாக்யராஜ், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளராக கலைச்செல்வி, தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக் கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாள ரான வடகுச்சிப்பாளையத்தை சேர்ந்த சேகர்,தேசிய சமூக நீதிக்கட்சி வேட்பாளரான திண்டிவனம் ஜனார்த்தனன், சுயேச்சை வேட்பாளர்களாக செல்வி, அற்பிசம்பாளையத்தை சேர்ந்த விநாயகம் ஆகிய 7 பேரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இவர்களோடு சேர்த்து இது வரை இத்தொகுதியில் 24 பேர் 28 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story