கீழ்வேளூர் அருகே மண் கடத்திய 7 பேர் கைது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மண் கடத்திய 7 பேர் கைது ஒரு டிராக்டர் 3 பைக்குகள் கைப்பற்றப்பட்டது           

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் நாகாப்பட்டினம் மாவட்டத்தில் சட்டத்திற்க்கு புறம்பான மணல் கடத்தலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து நாகை துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கீழ்வேளூர் காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட பகுதியான தேவூர் அருகே பெருந்தலைக்குடி பகுதியில் அனுமதி இன்றி டிராக்டரில் மண் அள்ளப்பட்டது தெரிய வந்து

இதை யடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த தனிப்படை போலீ சார் மணலை கடத்தலுக்காக டிராக்டரில் ஏற்றியவர்களான கீழ்வேளூரை அடுத்த விக்கனாபுரம் கலியபெருமாள் மகன் சுரேஷ் குமார் (47 ) பிச்சைக்கண்ணு மகன் சரவணன்(34) தேவூர் வ உ சி தெரு முருகையன் மகன் ரமேஷ் (46) தேவூர் காந்தி தெருவை சேர்ந்த ரவி மகன் குணசேகரன் (25) தேவூர் ஆறுமுகம் மகன் ரஜினி (36) பக்கிரி சாமி மகன் செல்லமுத்து (30) ஹரி கிருஷ்ணன் மகன் மகேந்திரன் (32)ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் மூன்று மோட்டார் பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள் இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பகிர்ந்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story