சமயபுரம் அருகே 7 பேர் கைது

சமயபுரம் அருகே 7 பேர் கைது

7 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, அரசால் தடை செய் யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் உள்ளூர் மற் றும் வெளியூரை சேர்ந்த நபர்கள் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பகுதியில் நேற்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.அப்போது அங்குள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பின்புறம் காட்டுப்பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து போலீசார் வருவதை| அறிந்து தப்பி ஓடினர். இருப்பினும் 7 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் இனாம் சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித் (வயது 25), லால்குடி அருகே உள்ள கபிரியேல்புரம் தெற்குத்தெருவை சேர்ந்த ஆலன் (20), பிச்சாண்டார் கோவில் பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த பூபதி (24), தெற்கு இருங்களூர் நடுத்தெருவை சேர்ந்த ஜான் நெப்போலியன் (29), லால்குடி அருகே உள்ள நெய்குப்பை முத்துராஜாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்த சுரேஷ் (44), லால்குடி அருகே உள்ள உப்பாத்தங்கரை நடுத்தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி (38), ச.கண்ணனூர் கோட்டக்கரைமேடு பகுதியைச்சேர்ந்த அனீஸ்அகமது (23) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்ப திவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 7சேவல்களும், 12 மோட்டார் பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 12 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகி றார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story