வந்தவாசி: வாகன சோதனையில் 7 வாகனங்கள் பறிமுதல்
வாகன சோதனை
வந்தவாசியில் காஞ்சிபுரம் சாலை மற்றும் மேல்மருவத்தூர் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் 7 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி,வந்தவாசி காஞ்சிபுரம் சாலை மேல்மருவத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது உரிய ஆவணம் இல்லாத 7 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது .இணைக்க கட்டணமாக 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணம் இல்லாமல் வந்த ஏழு வாகனங்களை பறிமுதல் செய்து வந்தவாசி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story