தாராபுரம் அருகே லாரி மோதி 7 வயது சிறுமி பலி
தாராபுரத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெஸ்ட் நகர் குடியிருப்பு அம்மன் நகர் பகுதியில் ராஜ்குமார் இவரது மனைவி பெரியக்கள் இவர்களது மகள் தர்ஷிகா வயது 7 குடும்பத்துடன் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உணவு தின்பண்டங்கள் வாங்குவதற்காக பொள்ளாச்சி சாலையை கடந்து தனக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கிகொண்டு மீண்டும் சாலையை கடக்கும் போது மேற்கு நோக்கி வந்த லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 வயது சிறுமி தர்ஷிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பகவான் கோவில் பகுதியைச் சேர்ந்த நல்லசாமி என்பவர் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் அவரைப் பிடித்து தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.