7வயது சிறுமி ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனை

7வயது சிறுமி ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனை

 உலக சாதனை

சங்கரன்கோவிலில் 7வயது சிறுமி ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகணேசன்-கோகிலா தம்பதியினர் மகள் 7 வயது சிறுமியான முவித்ரா உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களும் சாதிக்கலாம் என்ற வகையில் யுனிகோ வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சிக்கு ஸ்கேட்டிங் மூலம் 30 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில்கடந்து உலக சாதனை புரிந்துள்ளார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து பனவடலிசத்திரம் சென்று மீண்டும் பனவடலிசத்திரம் பகுதியில் இருந்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரை வரை 30 கிலோமீட்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் அசுர வேகத்தில் ஸ்கேட்டிங்கில் சென்ற சிறுமி முவித்ரா தரப்பட்ட இலக்கு தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் சிறுமியின் உலக சாதனையை யுனிகோ வேர்ல்டு ரிக்கார்டு என்ற அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளதாகவும் அப்துல் கலாம் ஸ்கேட்டிங்சென்டர் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் சிறுமி முவித்ரா-க்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சக்திவேல், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story