தந்தையை அடித்துக்கொன்ற வாலிபருக்கு 7ஆண்டு சிறை

தந்தையை அடித்துக்கொன்ற வாலிபருக்கு 7ஆண்டு சிறை

தந்தையை அடித்துக்கொன்ற வாலிபருக்கு 7ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடி பகுதியில் தந்தை கொலை செய்த மகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே வெள்ளமோடி வடக்கு தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (50). இவரது மகன் சூர்யா (24). பாலிடெக்னிக் படித்த இவர் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சூர்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி இருந்தார். செலவுக்கு தந்தை லிங்கதுரையிடம் பணம் கேட்டு சூர்யா தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22/7/2020 அன்று இரவு லிங்கதுரைக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த கம்பு எடுத்து, தந்தை லிங்கதுரையை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் சூர்யாவுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story