பெரியகுளம் அருகே முவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரன் என்பவரது சகோதரனின் மனைவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி திருமண பந்தத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், அதை சித்திரன் தட்டி கேட்டதால் சித்திரனுக்கும், துரைப்பாண்டிகும்,
இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதத்தால் சித்திரனை கொலை செய்யும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு துரைப்பாண்டி அவரது சகோதரர் பெரியபாண்டி, மற்றும் அவரது தந்தை பரமன் ஆகிய மூவரும் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் விரட்டி, விரட்டி, வெட்டி கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர்.
இதில் சித்திரன் படுகாயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சிகளின் அடிப்படையில் துரைப்பாண்டி,
அவரது சகோதரர் பெரிய பாண்டி மற்றும் அவரது தந்தை பரமன் ஆகிய தந்தை மகன்கள் மூவரும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 5000 ரூபாய் அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று நபர்களையும் சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.