70% சதவீத விசைத்தறிகள் நிறுத்தம்

70% சதவீத விசைத்தறிகள் நிறுத்தம்

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் 70 சதவீத விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. 

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் 70 சதவீத விசைத்தறிகள் இயக்கப்படவில்லை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ,இந்த விசைத்தறி தொழிலை நம்பி பணியாற்றி வருகின்றனர். தை மாதத்தில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் பாதயாத்திரை ஆக பழனிக்கு வருடம் தோறும் சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டும் தைத்திருநாளை ஒட்டி ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் பழனி மலைக்கு பாதயாத்திரையாக சென்றுவிட்டனர் . இதன் காரணமாக பள்ளிபாளையம் குமாரபாளையம் வட்டார பகுதிகளில் சுமார் 70% சதவீதமான விசைத்தறிக்கூடங்கள் இயங்காத நிலை உள்ளது .

Tags

Next Story