தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்து இயக்கம்
தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தைப்பூசம் குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்களான 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோவை மற்றும் சுற்றுப்புற ஊரிலிருந்து மருதமலை,பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர்,மதுரை தேனி,திருச்சி,சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் திரும்பி வரவும் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
Next Story