கேரளாவுக்கு கடத்த முயன்ற 70 டன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரியில் கேரளா எல்லை பகுதியான செறியகொல்லா சோதனை சாவடியில் அரசி ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பிடித்து ரேசன் அரிசி கடத்தி செல்லப்பட்டதா என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்,
கன்னியாகுமரி கேரளா எல்லை பகுதி செறியகொல்லா என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு இரண்டு பெரிய லாரிகளில் 35 டன் வீதம் சுமார் 70 டன் அரிசி கொண்டு செல்ல முயன்றனர். செக் போஸ்ட் பணியில் இருந்த போலீசார் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் விசாரித்தபோது இந்த அரிசி ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரள எல்லை பகுதி பனச்சமூடு என்ற இடத்தில் உள்ள அரிசி கடைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தியது ரேஷன் அரிசியா? அல்லது கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசியா ? என சோதனை மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தனிப்பிரிவு பறக்கும் படை துணை தாசில்தார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
Next Story