700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
தமிழக முதல்வர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்று சேரும் வகையில் அதிகாரிகளை ஓரிடத்தில் வரவைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளுக்கும் இந்த திட்டம் சென்றடையும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் 6 பகுதிகளாக பிரிக்கப பட்டு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனாங்குறிச்சி ஆனங்கூர் மோடமங்கலம், கருவேப்பம்பட்டி, தண்ணீர் பந்தல்பாளையம், ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவனாங்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள கே ஆர் மஹாலில் அரசின் 14 துறைகள் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு அவர்களது மனுக்களை ஆன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு உரிய விளக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் உடனடியாக தீர்க்கப்பட்ட 10க்கும் நபர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன், மண்டல நகர அமைப்பு திட்டக் குழு உறுப்பினர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் திருநங்கை ரியா,அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் தேவனாங்குறிச்சி ஊராட்சி தலைவர் அருண் குமார், கருவேப்பம்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் மைனாவதி ஆனந்த்,வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி ராஜவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மதுரா செந்தில் ஆகியோர் குறைகளை கேட்டு அதற்கான தீர்வை வழங்கும் படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இந்த முகாமில் 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
Next Story