பட்டுக்கூடு கிலோ ரூ.700 விலை நிர்ணயம் செய்யக்கோரி

பட்டுக்கூடு கிலோ ரூ.700 விலை நிர்ணயம் செய்யக்கோரி
X

சேலத்தில் பட்டுக்கூடு கிலோ ரூ.700 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சேலத்தில் பட்டுக்கூடு கிலோ ரூ.700 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், பட்டுக்கூடு கிலோ ஒன்றுக்கு ரூ.700 விலை நிர்ணயம் செய்யக்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன், பட்டு விவசாயிகள் பாதுகாப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் சுகுமார், கோவிந்தசாமி, ராஜமாணிக்கம் உள்பட பட்டு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தரமான பட்டு மூட்டைகளை இளம்புழு மையங்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு விற்பனை சந்தை அமைக்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர் தலைமையில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு மாதமும் பட்டு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக மண்டலம் விட்டு மண்டலம் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story