திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு

வாக்கு இயந்திரம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58% வாக்குகள் பதிவு. அதிகபட்சமாக பவானியில் 78.05% வாக்கு பதிவாகியுள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு. அதிகபட்சமாக பவானியில் 78.05 சதவீதம். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் அதிகபட்சமாக பவானி சட்டமன்ற தொகுதியில் 78.05 சதவீதம் வாக்குகள் பதிவானது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 250 பேர் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர். 694 இடங்களில் 1744 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பொதுமக்கள் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குப்பதிவானது. இதில் பெருந்துறையில் 77.68 சதவீதமும், பவானி தொகுதியில் 79.05 சதவீதமும், அந்தியூரில் 76.51 சதவீதமும், கோபிசெட்டிபாளையத்தில் 78.49 சதவீதமும், திருப்பூர் (வடக்கு) 59.27 சதவீதமும், திருப்பூர் (தெற்கு) 61.06 சதவீதமும் என மொத்தம் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இதில் அதிகபட்சமாக பவானியில் 79.05 சதவீதமும், குறைவாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 59.27 சதவீதமும் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 64.56 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story